50 அடி பள்ளத்தில் விழுந்த டிப்பர்….. ஒருவர் மரணம் ஒருவர் ஆபத்தான நிலையில்!!
வத்துகாமம் – எல்கடுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (12) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வத்துகாமம் – எல்கடுவ வீதியில் பயணித்த டிப்பர் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதனால்,
டிப்பரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சாரதி காயமடைந்துள்ள நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை வத்துகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.