வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் சில சேவைகள்….. மறு அறிவித்தல்வரை நிறுத்தம்!!
இலங்கை வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவை ஒன்று மறு அறிவித்தல் வரை முடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே குறித்த சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,
கொழும்பு 01 இல் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவிலும்,
யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் முதலான பிராந்திய அலுவலகங்களிலும் சரிபார்ப்பு மற்றும்
மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
