நுரைச்சோலை அனல் மின் நிலையம் மீண்டும் செயலிழப்பு!!
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி மீண்டும் பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி முதல் செயலிழந்திருந்த குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு, நேற்றைய தினம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,
இன்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேற்படி மின் பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனால் தேசிய மின் கட்டமைப்பில் 270 மெகாவோட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும்,
மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.