LatestNewsTOP STORIES

முக்கிய அறிவித்தலை வெளியிட்ட கொழும்புத் தமிழ்ச் சங்கம்!!

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் சான்றிதழ் கற்கை நெறி வகுப்புகள் கொரோனா தொற்றுத் தாக்கத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் கல்விக்குழு அறிவித்துள்ளது.

இக் கற்கை நெறி வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் நடைபெறும்.

2020-2021 கற்கை நெறிக்காக விண்ணப்பித்து கற்கை நெறியில் ஏற்கனவே கற்றுக் கொண்டிருந்த மாணவர்களும்,

புதிதாகக் கற்க விரும்பும் மாணவர்களும் சங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இலவசமாக நடாத்தப்படும் இக்கற்கை நெறிக்கு ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கியச் செயற்பாட்டாளர்கள், உயர்தர வகுப்பு மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட ஆர்வம் உள்ள அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

2363759 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறவும்.

அல்லது பொதுச் செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம் இல-07 சங்கம் மாவத்தை கொழும்பு- 06 என்ற முவகரிக்கு உங்கள் சுய விபரக் கோவையை அனுப்பிவைக்குமாறு கல்விக் குழு கோரியுள்ளது.

நேர்முகப் பரீட்சை ஒன்றின் மூலம் அடிப்படைத் தகமைகளைப் பெற்ற மாணவர்கள் இக் கற்கை நெறிக்கு அனுமதிக்கப்படுவர் மொழித்துறைப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் தமிழ் இலக்கிய, இலக்கணத் துறைசார்ந்த வளவாளர்கள் இக் கற்கை நெறியின் விரிவுரையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவருட கற்கையின் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் வழங்கப்படும் என்றும் மேலும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *