FEATUREDLatestNewsTOP STORIESWorld

பிரித்தானியாவின் புதிய மன்னராக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டார்….. செயின்ட் ஜேம்ஸ்!!

பிரித்தானியாவின் புதிய மன்னராக

செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று(10/09/2022) நடைபெற்ற நிகழ்வில் மூன்றாம் சார்லஸ் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மன்னராக சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சார்லஸ்,

அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்த தனது வாழ்நாளில் எஞ்சிய காலம் முழுவதும் பாடுபடுவேன் என உறுதி அளித்துள்ளார்.

அரசியலமைப்பை நிலைநிறுத்தும் கடமைகளை மறைந்த மகாராணி மிகவும் உறுதியான பக்தியுடன் செய்தததை போன்று தாம் மேற்கொள்வேன் என அவர் கூறியுள்ளார்.

மறைந்த மகாராணி எலிசபெத் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ததாக மன்னராக நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் மூன்றாம் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.

தனது அன்புக்குரிய தாய் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தார் என பிரித்தானிய மன்னர் தெரிவித்துள்ளார்.

தனது தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தால் ஆழ்ந்த வருத்தத்தை உணர்வதாகவும், தேசத்திற்கு அவரது “வாழ்நாள் சேவையை” தொடர உறுதியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மகாராணியான பின்னர் அன்பான மனைவி கமிலாவிடம் இருந்து நம்பகமான உதவியை பெற முடியும் எனவும் மன்னர் மூன்றாம் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *