செலவீனங்களை குறைக புதிய அரச அலுவலங்கள்…. வரவு செலவுத் திட்ட உரையில் பசில் ராஜபக்ச!!(உரையின் மேலதிக விபரங்கள் உள்ளே)
அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அவர், தமது அரசால் முன்வைக்கப்பட்ட யோசனைகளையும் வரிசைப்படுத்தியுள்ளார்.
அவரால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் வருமாறு,
1) அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு தடை
2) மின்சாரத் தேவையை சூாிய சக்தியை பெற்றுக்கொள்ளவும், அரச அலுவலங்களின் தொலைபேசி பாவைனையை 25 வீதம் குறைக்கவும் யோசனை
3) அனைத்து அரச பணியாளா்களின் ஓய்வூதிய முரண்பாடுகள் தீா்க்கப்பட்டு, புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும்
4) அரச சேவையின் பணியாளா்களது ஓய்வூதிய வயது 65 ஆக உயா்த்தப்படுகிறது
5) அனைத்து பாடசாலைகளுக்கும் நவீன இணைய வசதிகள் செய்துக்கொடுக்கப்படும். 6) முச்சக்கர வண்டிகளுக்கான அதிகாரசபை அமைக்கப்படவுள்ளது
7) ஓய்வூதியம் பெறாத சிரேஸ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதியத் திட்டம். இதற்காக 100 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது
8) புதிய வியாபாரங்களுக்கு 2022 இல் பதிவுக்கட்டணங்கள் அறவிடப்படாது
9) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் தகுதிக்காலம் 10 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது
10) சேதனப் பசைளையை ஊக்குவிக்க கிராம சேவகர் மட்டத்தில் திட்டம் முன்னெடுக்கப்படும்
11) வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க, நிபந்தனைகளை தளா்த்துவதற்கு திட்டங்கள் விரைந்து முன்னெடுக்கப்படும்
12 ) வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு செல்வோருக்கான பயிற்சிகள் மேம்படுத்தப்படும்
13) அரச சேவையாளா்களுக்கான எாிபொருள் 5 லீற்றர்களால் குறைக்கப்படும். மாதாந்த தொலைபேசி கட்டணம் 25வீதத்தினால் குறைக்கப்படும்
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் உரை
ஏற்றுமதி தொழிற்சாலைகளை மீண்டும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சௌபாக்கிய நோக்கு திட்டத்தில் அதற்கான பரந்த வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.
கடன் நெருக்கடிக்கு மத்தியிலும் 2 பில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகள் இரண்டினை செலுத்தியுள்ளோம். 2018 ஏப்ரல் 2019 ஜூலை மாதம் வரையில் 15 மாதங்களில் 6.9 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய பாரிய சுமை எமக்கு சுமத்தப்பட்டுள்ளது.
வரவு – செலவுத்திட்டத்தின் அதிக செலவு – கடன்களுக்கான வட்டியை செலுத்தவே ஒதுக்கப்பட்டுள்ளது சுற்றுலாத்துறை மூலமாக கிடைத்த 5 பில்லியன் ரூபா கிடைக்காது போயுள்ளது , வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் மூலமாக கிடைக்க வேண்டிய நிதியும் குறைவடைந்துள்ளது.
உற்பத்திப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமையும், நாட்டில் பொருளாதாரத்தை உற்பத்தி பொருளாதாரத்தின் பக்கம் கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் அவசியமாகின்றது. வாழ்வாதார விலைவாசி அதிகரிப்பு சவால்கள், நிலையான தீர்வை பெற்றுகொடுக்க எந்த அரசாங்கத்திற்கும் முடியாமல் போனமையே உண்மையாகும்.
வியாபார மாபியா மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தும் தரகர்கள் சமூகத்தில் கலந்துள்ளனர். இது குறித்து சகலரும் அவதானமாக இருக்க வேண்டும். சர்வதேச போதைப்பொருள் மாபியாக்குள் இலங்கையை சிக்கவைக்கும் முயற்சி இன்றும் பலமாக முன்னெடுக்கப்படுகின்றது.
இளைஞர்களே இதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். ஆசிய வலயத்தின் ஏனைய நாடுகளை விடவும் எம்மால் விரைவாக மீட்சி காண முடியும் என்ற நம்பிக்கை எம்மிடத்தில் உள்ளது. ஆசிய கண்டத்தின் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட நாடாகவே இலங்கையை பலர் அடையாளப்படுத்துகின்றனர்.
முதலாம் இணைப்பு
2022 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் (Basil Rajapaksa) இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
சுதந்திர இலங்கையின் 76 ஆவது வரவு – செலவுத் திட்டமாகவும், தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு – செலவுத் திட்டமாகவும் இது அமைந்துள்ளது.
செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்காக இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதத்தை சைகை மொழியில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.