இந்தோனேசியாவில் பாரிய எரிமலை வெடிப்பு…. இதுவரையில் 11 பேர் உயிரிழப்பு – காணாமல் போயுள்ள மேலும்12 பேர்!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமாத்திராவின் மேற்கு மாகாணத்தில் நேற்று (03/12/2023) 2891 மீற்றர் உயரத்தில் இந்த எரிமலை வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது,

11 பேர் உயிரிழந்ததுடன் 3பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

எனினும்,

12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பெரும் அளவிலான சாம்பல்கள் படிந்துள்ளதுடன் வீதிகள் மற்றும் கார்களை குப்பைகள் மூடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பசுபிக் நெருப்பு வளையத்தில் உள்ள இந்தோனேசியாவில் 127 உயிர்ப்பு எரிமலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசியாவில் கடந்த மாதம்(நவம்பர்) 22ஆம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது எரிமலை வெடிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *