1 வருட டிராகன் திரைப்பயணம் 1 நிமிட வீடியோவை வெளியிட்ட அஷ்வத்
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. திரைப்படம் ஓடிடி வெளியீட்டிலும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சமீபத்தில் டிராகன் படக்குழு நடிகர் விஜயை சந்தித்தனர்.அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அவரது டிராகன் திரைப்பட 1 வருட பயணத்தை 1 நிமிட வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
1 year journey as Dragon Director in 1 minute ! ❤️🔥
Thank you 🤗@pradeeponelife @archanakalpathi @aishkalpathi @Ags_production ♥️#Dragon pic.twitter.com/B03kRc2WRk— Ashwath Marimuthu (@Dir_Ashwath) March 28, 2025