LatestNewsTOP STORIESWorld

ஏமனில் சிறைச்சாலை மீது விமானத் தாக்குதல்….. குறைந்தது 70 பேர்!!

ஏமன் நாட்டில் உள்ள தடுத்துவைப்பு மையம் ஒன்றின் மீது சௌதி தலைமையிலான கூட்டணி வெள்ளிக்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் 70இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தடுத்துவைப்பு மையம் அல்லது சிறைக்கூடம் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாதா என்ற இடத்தில் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்துள்ளது.

போர்ப்பதற்றம் அதிகரிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றும் விமானத் தாக்குதல் குறித்து விசாரணை நடந்த  ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) உத்தரவிட்டுள்ளார்.

செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான கூட்டணி நாடுகள் 2015ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்றன.

10 ஆயிரம் குழந்தைகள் உட்பட பல்லாயிரம் பொதுமக்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்.

பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் போரால் புலம் பெயர்ந்துள்ளனர்.

பஞ்சம் ஏற்படும் ஆபத்து தலைகாட்டி வருகிறது.

இது மக்கள் தொகையின் பெரும்பகுதியைப் பாதிக்கும் நிலை உள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடந்து பல மணி நேரம் கழிந்த பிறகும் இடிபாடுகளில் இருந்து மீட்புப் பணியாளர்கள் சடலங்களை மீட்டுவருகின்றனர்.

இந்த இடிபாடுகளில் யாராவது உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை தேய்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டதாகவும், இந்த எண்ணிக்கை உயரும் என அஞ்சுவதாகவும் மெடசின்ஸ் சேன்ஸ் ஃப்ரான்டியர்ஸ் எல்லைகள் கடந்த மருத்துவர்கள் என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *