“Biometric Datas” உடன் வருகிறது இனி இலங்கையர்களுக்கான புதிய தேசிய அடையாள அட்டைகள்!!
இலங்கைவாழ் மக்களுக்கான தேசிய அடையாள அட்டைகள்
புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறிள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போது தேசிய அடையாள அட்டையைப் பெற பொதுவான தரவுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
எனவே,
பயோமெட்ரிக் தரவுகளை (Biometric Datas) இனிமேல் அடையாள அட்டைகளில் சேர்க்கப்பட வேண்டும்.
பயோமெட்ரிக் தரவு(Biometric Datas) எனப்படுவது நமது கைரேகைகள்(Fingerprints), இரத்த வகை(Blood Group) தொடர்பான விபரங்கள், கண் தரவுகள்(Eye Datas) என்பவற்றை உள்ளடக்கியதாகும்.
ஆகவே,
எதிர்காலத்தில் இந்த பயோமெட்ரிக் தரவை சேர்த்து தேசிய அடையாள அட்டையை வழங்கத் தொடங்குவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும்,
பயோமெட்ரிக் தரவுகளை(Biometric Datas) இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை(Digital Identity Card) கட்டமைப்பை தயாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இந்த செயற்பாடு இந்திய உதவியின் கீழ் அனைத்து விடயங்களும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய,
அனைவரும் மீள் பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது என வியானி குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.