மாஸ்டர் படத்தின் விஜய் படத்தை பகிர்ந்து சி.எஸ்.கே. அணிக்கு பஞ்சாப் கிங்ஸ் பதிலடி
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 220 எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றிக்கு பின்பு பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் மாஸ்டர் பட விஜய் புகைப்படத்தை பகிர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மாஸ்டர் படத்தின் இறுதிக்காட்சியில் விஜய் – விஜய் சேதுபதி மோதும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
https://t.co/MLr8K0eGYy pic.twitter.com/j1Ra0hrL0n
— Punjab Kings (@PunjabKingsIPL) April 8, 2025