EntertainmentLatestNewsTOP STORIESWorld

ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்திய இரு முக்கிய நிறுவங்கள்!!

டிக்டொக் செயலி நிறுவனம் ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், “போலி செய்திகளுக்கு” 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.

இந்த சட்டத்தின் மூலம்,

இராணுவத்தைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதற்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும், அத்துடன்,

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்குப் பகிரங்கமாக அழைப்பு விடுக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலி செய்திகளுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை வழங்கும்.

இந்தநிலையில்,

ரஷ்யாவின் புதிய ‘போலி செய்தி’ சட்டத்தினால் எங்கள் வீடியோ சேவையின் நேரடி ஒளிபரப்பை நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என டிக்டொக் செயலி நிறுவனம் தெரிவித்தது.

இதுதொடர்பாக டிக்டொக் செயலி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்கள் பெரும் சோகத்தையும் தனிமைப்படுத்தலையும் எதிர்கொள்ளும் போரின் போது நிவாரணம் மற்றும் மனித தொடர்பை வழங்கக்கூடிய படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கிற்கான ஒரு பங்காக இருக்க விரும்புவதாகவும், மேலும் செயலியின் ஊழியர்கள் மற்றும் பயனர்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கூறியுள்ளது.

TikTok நிறுவனத்தின் உத்திட்டோக்கபுர்வ Tweet ஐ இங்கே Click செய்து பார்வையிடுங்கள்.

இந்நிலையில்,

ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தியுள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமான ஏவுகணைத் தாக்குதல், வான்தாக்குதல், பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு முக்கிய நகரங்கள் அத்தனையையும் உருக்குலைய வைத்து வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *