ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ்….. மீண்டும் களமிறக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தினர்!!
இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவென தெரிவித்து மீண்டும் இலங்கை இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக,
சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
இன்று(22/09/2022) வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதற்காகவென தெரிவித்து கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,
இலங்கை அதிபர் மீண்டும் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவைப் பயன்படுத்தி ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த அதிபர்களும் நடைமுறைக்கு மாறான அவசர நிலையை தொடர்ந்து பிரகடனப்படுத்தி வந்தததையும் அம்பிகா சத்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/register?ref=P9L9FQKY