#Vesak

FEATUREDLatestNewsTOP STORIES

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது!!

இன்று (15/05/2022) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். வெசாக் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நிலை காணப்பட்டது. அத்துடன், தற்போது ஹம்பாந்தோட்டையில் எரிபொருளை கோரி சில குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More
LatestNews

ரத்து செய்யப்பட்டது அரச வெசாக் நிகழ்வு!

யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அரச வெசாக் நிகழ்வை வேறு இடத்தில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் திட்டமிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More