50 அடி பள்ளத்தில் விழுந்த டிப்பர்….. ஒருவர் மரணம் ஒருவர் ஆபத்தான நிலையில்!!
வத்துகாமம் – எல்கடுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (12) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். வத்துகாமம் – எல்கடுவ வீதியில் பயணித்த டிப்பர் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதனால், டிப்பரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சாரதி காயமடைந்துள்ள நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை வத்துகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Read More