பல்கலைக்கழகத்தின் ‘அனைத்து கல்வி நடவடிக்கைகள்’ மற்றும் ‘பரீடசைகள்’ இடைநிறுத்தம்….. பேராசிரியர் எம்.டி.லமவன்ச!!

பேராதனை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச வெளியிட்டுள்ளார்.   அதன்படி, பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர் விடுதிகளையும் மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் விடுதிகளை விட்டு உடனடியாக வெளியேறி வீடுகளுக்கு செல்லுமாறு பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read more

கொரோனாவை கண்டுபிடிக்கும் புதிய கருவி….. பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் குழுவினரின் கண்டுபிடுப்பு!!

கொரோனா தொற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு விரைவான ஆன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முறைகளே தற்போது இலங்கையில் உள்ளன. எனினும், கொரோனாவை கண்டுபிடிக்கும் புதிய கருவி ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் உள்ளிட்ட குழுவினர் உருவாக்கியுள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்சவின் வழிகாட்டுதலில் இந்த கருவியை மூத்த  உள்ளிட்ட குழு வடிவமைத்துள்ளது. இந்த கருவி சுகாதார அமைச்சர் டாக்டர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது மலிவாக கிடைப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் காணவும் உதவுகிறது. ரூபாய் Read More

Read more