இடைநிறுத்தப்பட்டது எட்டு ரயில் சேவைகள்!!

மண்சரிவு எச்சரிக்கை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் தண்டவாளத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால், கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையிலான எட்டு ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மோசமான வானிலைக்கு மத்தியிலும் ஊழியர்கள் தற்போது பாதையை புனரமைக்க முயற்சித்து வருவதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கசுன் சாமர தெரிவித்தார்.

Read more