தவறான முறையில் செயற்படும் மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்….. நிர்வாகத்தை மாற்ற கோரி உறுப்பினர்கள் கையெழுத்துடன் மனு!!

மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் பல வழிகளில் தவறான முறையில் நிர்வாக செயல்பாடுகளை பயன்படுத்தி வருவதாக அச்சங்கத்தின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிய நிர்வாகத்தை ஏற்படுத்துமாறு கோரி குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் எழுத்து மூலம் இன்று(06/09/2022) செவ்வாய்க்கிழமை மன்னார் நகர சபையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் பல வழிகளில் நிர்வாக செயல்பாடுகளை தவறான Read More

Read more

எரிபொருள் கப்பல் வருகை தெடர்பாக மகிழ்ச்சியான செய்தி!!

எரிபொருள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க, பெரும்பாலும் 15 ஆம் அல்லது 16 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கப்பல் வரும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும், எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால் இதன்போது பிரதமருக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

திடீரென தீப்பற்றியெரிந்தது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி!!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றியெரிந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரதநிலைய வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் பாரிய அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டிருந்தது. குறித்த தீ விபத்து காரணமாக முச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

பாடசாலை வானுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதல்….. சம்பவ இடத்திலேயே இருவர் மரணம்!!

அலவ்வ – கிரியுல்ல பிரதான வீதியின் மிரிஹெலிய பிரதேசத்தில் நேற்று(28/03/2022) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது ​​எதிர்திசையில் வந்த பாடசாலை வானுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். அலவ்வ, உதகன்கந்த பகுதியைச் சேர்ந்த சிறினிமல் விக்கிரமசிங்க (37) மற்றும் பிரியங்கர சம்பத் (32) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். அலவ்வ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

புகையிரதத்தில் மோதுண்டது முச்சக்கரவண்டி….. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!!

வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதுண்ட முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்து இன்று முற்பகல் 10.45 மணியளவில் அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் மருமகள் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். இவர்கள் காலியை பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலி – பூஸா வெல்லப்பட பகுதி ரயில் கடவையூடாக கடந்த முச்சக்கர வண்டியை ரயில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. ஒருவர் Read More

Read more