நாட்டில் ஆரம்பமாகவுள்ள புதிய விமான சேவை: வெளியான மகிழ்ச்சி தகவல்
இலங்கையின் முதல் தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவை எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த விமான சேவை இலங்கையில் இருந்து மலேசியாவின் (Malaysia) கோலாலம்பூருக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஃபிட்ஸ்ஏர் (FitsAir) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விமான நிறுவனம், வணிக மற்றும் சுற்றுலா விமானங்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், பயணிகள் மலிவு விலையில் இந்த விமான சேவையைப் பெற முடியும் என்றும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Read More