#Srilanka

FEATUREDLatestNewsTOP STORIES

ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் விளையாடிய சிறுவர்கள் மரணம்!!

இரண்டு சிறுவர்கள் ஆற்றில் குளித்தவேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று(01/07/2023) மாலை ஸ்ரீபுர திஸ்ஸபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆற்றில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கிய சிறுவர்கள் ஸ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 12 வயது மற்றும் 15 வயதுடைய இருவரே உயிரிழந்தவர்களாவர். சிறுவர்கள் இருவரும் ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளதாகவும் இதன்போது, அவர்களின் தலைகள் ஒன்றாக இடித்து Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் – அராலியில் நேருக்கு நேர் மோதிய மோட்டார்சைக்கிள்கள்….. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம்(29/06/2023) வியாழக்கிழமை மதியம் இரண்டு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த யாழ். போதனா வைத்திய சாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( 37 வயது) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும் (Mechanic) Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சுற்றுலா சென்றதற்காக அதிபரால் கடுமையாக தண்டிக்கப்பட்ட பிரபல பாடசாலை மாணவர்கள்!!

கிளிநொச்சி தருமபுரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் சுமார் 30 இற்கும் அதிகமான மாணவர்கள் அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை(25/06/2023) திருகோணமலைக்கான ஒருநாள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலைக்கு கடந்த திங்கட் கிழமை(26/06/2023) குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் சமூகமளித்திருக்கவில்லை. பாடசாலைக்கு சமூகமளிக்காததற்கான காரணமாக, சுகயீனமென குறிப்பிட்டு கடிதமெழுதிக் கொண்டு ஒரு பகுதி மாணவர்கள் நேற்று முன்தினம்(27/06/2023) பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர். சமூகமளிக்காத மாணவர்கள் வகுப்புக்கு வெளியில் நிறுத்தப்பட்டு அதிபரால் அடித்து தண்டிக்கப்பட்டனர். Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

விசேட தேவையுடையோருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம்….. போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் அனுமதி!!

விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். வைத்தியர்களின் இந்த உடன்படிக்கையுடன், அவர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கையொன்று இம்மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம்!!

வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று(28/06/2023) புதன்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞரின் பெற்றோர் காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்த போது இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி அனுமதி!!

வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது. அந்த உடன்படிக்கையின் கீழ், இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். உரிய நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவையின் அனுமதி தேவை. கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட 2.9 மில்லியன் டொலர் கடன் வசதியின் பின்னர் நாடு பெற்றுள்ள மிகப் பெரிய நிதி உதவி இதுவாகும். இலங்கைக்கு 700 மில்லியன் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மீண்டும் குறையும் எரிவாயு விலை….. லிட்ரோ நிறுவனத்திடமிருந்து அறிவிப்பு!!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஜூலை மாத தொடக்கத்தில் மீண்டும் குறைக்கப்படவுள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஜுன் மாதம் 04 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடனுதவித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு அண்மையில் 500 பேருந்துகள் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன், கடந்த காலங்களில் உதிரிப்பாகங்கள் பற்றாக்குறை காரணமாக சேவையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிகளவான பேருந்துகள் தற்போது பழுதுபார்க்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தத் தயார் செய்யப்பட்டுள்ளன. எனினும், அவற்றைச் சேவையில் ஈடுபடுத்துவதற்குப் போதுமான ஊழியர்கள் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வெற்றிடங்கள் காரணமாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையை ஜூலை 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்…………………. எதிர்வரும் வரும் மாதங்களில் மேலும் பல உள்நாட்டு இடங்களுக்கு சேவைகளை முன்னெடுக்க டிபி ஏவியேஷன் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

24 வயது இளைஞர் ஒருவர் ஓடும் புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை!!

இளைஞர் ஒருவர் ஓடும் தொடருந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் திருகோணமலை மாவட்டத்தில், கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம்(23/06/2023) இரவு திருகோணமலையிருந்து கொழும்புக்குச் சென்ற இரவு நேர தபால் கடுகதி தொடருந்தில் பாய்ந்து குறித்த இளைஞர் தன் உயிரை மாய்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பியந்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கயான் மதுசங்க என்ற திருமணமான இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் Read More

Read More