#Sri lnaka

LatestNewsTOP STORIES

இன்றைய மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவித்தல்!!

மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்க பெறாமையினால் இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 03 பிரிவுகளில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது. 541 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் மின் தடையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக Read More

Read More
LatestNewsTOP STORIES

ஆரம்பமானது 12 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் சந்தை!!

12 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் சந்தை நேற்றைய தினம் (21) யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தை எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. யாழ். வர்த்தக சங்கம் மற்றும் கைத்தொழில் சம்மேளனம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை வடக்கில் உள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு சிறந்த அடித்தளமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Read More
LatestNews

பாரிய பஸ் விபத்து திருகோணமலை கப்பல்துறை பகுதியில்!!

திருகோணமலையில் ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை சீனக்குடா காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியில் தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோமரங்கடவெல பகுதியில் இருந்து கப்பல் துறை பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் Read More

Read More
LatestNews

நாளை முதல் ஆரம்பமாகிறது அனைத்து தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள்!!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் நாளை (22) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அலகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார். தற்போது தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும், 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தன. இந்த Read More

Read More
LatestNews

இலங்கை மக்களை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய் -மருத்துவர்களை நாடுமாறு அறிவுறுத்தல்!!

கொரோனா தொற்றை அடுத்து இலங்கை மக்களை மற்றுமொரு நோய் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. டீனியா என்கிற ஒருவித பூஞ்சை நோயே இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது கொரோனா தொற்றுடன் நேரடியாக தொடர்புபடாத போதிலும் அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவர்களை நாடும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள், மிருகங்கள் என பலருக்கும் இந்த தோல் நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. விரல், தலை என பல்வேறு இடங்களிலும் தொடர் அரிப்பு நிலைமையை ஏற்படுத்தும் என்றும் Read More

Read More
LatestNews

பாரிய சவால்களை சந்தித்துள்ள வங்கிகள்!!

இலங்கையின் வங்கிக் கட்டமைப்பு மிகப்பெரிய சவாலுக்கு உள்ளாகியிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வணிக வங்கி மற்றும் வர்த்தகம் பற்றி ஆய்வுகளை நடத்துகின்ற பிச் ரேட்டிங் (Fitch Ratings) என்ற அமைப்பு தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்தத் தகவலை இன்று வெளியிட்டுள்ளது. அந்நிய செலாவணி சரிவை ஈடுசெய்வதற்காக இலங்கை மத்திய வங்கி ஊடாக அரசாங்கம் வெளியிட்டிருக்கின்ற பிணை, முறிகள் மற்றும் வட்டிவீதம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2020ஆம் வருட இறுதியில் இலங்கை வங்கிக் கட்டமைப்பிடம் இருந்த சொத்து Read More

Read More