‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக Read More

Read more

ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. தனது மனைவியுடன், ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடி உள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு Read More

Read more

தொடர்ந்து எக்மோ கருவி மூலம் எஸ்.பி.பி.க்கு சிகிச்சை – மருத்துவமனை அறிக்கை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலமாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக Read More

Read more