யாழ் – சாவகச்சேரி வாசி கொரோனாவால் பலி

யாழ். சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கொவிட் – 19 நோயால் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லேரியா தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார். குறித்த பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முல்லேரியாவிலேயே மின்தகனம் செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more