#Ranil

LatestNewsTOP STORIES

“உங்களால் முடியாவிட்டால் எம்மிடம் கையளித்துச் செல்லுங்கள் என்பதே அவர்கள் அனைவரும் ஒருமித்துக் கூறும் செய்தியாகும்……” ரணில் விக்ரமசிங்க!!

பாரியதொரு அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இளைஞர்களின் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அது நிச்சயம் வெற்றி பெறும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தார். 5ஆவது நாளாக கொழும்பு – காலி முகத்திடலில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “மிகவும் அமைதியான முறையில், நேர்த்தியாக அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் அவர்கள் ஒன்று கூடியுள்ளனர். Read More

Read More
LatestNews

தற்போது ஓய்வூதியம் வழங்கக்கூட அரசாங்கத்திடம் பணம் இல்லை…. ரணில் விக்கிரமசிங்க!!

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி கொரோனாவிற்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது என தெரிவித்துள்ள ஐ.தே.க வின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க  ( Ranil Wickremesinghe )தற்போது ஓய்வூதியம் வழங்கக்கூட அரசாங்கத்திடம் பணம் இல்லையென தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் கொரோனா அல்ல.மாறாக முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்கள் கைவிடப்பட்டமையே தற்போதைய நிலைக்கு காரணம். அரசாங்கம் 2019 இல் தனது பொருளாதார கொள்கையை மாற்றியதை தொடர்ந்தே வீழ்ச்சி ஆரம்பமானது. Read More

Read More
LatestNews

தொடர்ந்து முடக்கப்படும் ஸ்ரீலங்கா?? ஏற்றுக்கொள்ளப்படுமா ரணில் விக்ரமசிங்கவின் கருத்து!!

இலங்கையில் கொவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கு இலத்திரனியல் அட்டை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவது அவசியம் என முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் 2021ஆம் ஆண்டிற்கான அதிக பணவீக்க விகிதம் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.

Read More
LatestNewsWorld

ஆப்கானிஸ்தானால் இலங்கைக்கும் ஆபத்து – விடுக்கப்பட்டது அபாய எச்சரிக்கை!!

ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஆப்கானிஸ்தான் – காபூலில் உள்ள இலங்கை பணியகத்தை மூடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட ரணில், “ஆப்கானிஸ்தானில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது ஜிகாத் மற்றும் அல்-கொய்தா போன்ற பயங்கரவாதக் குழுக்களின் மையமாக மாறும். எனவே அந்த நாட்டில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய நிர்வாகத்தை இலங்கை அங்கீகரிக்கக் கூடாது. அந்த Read More

Read More