நாளைய மின்வெட்டு தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

நாளை வியாழக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படுவது தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது. இதன்படி நாளையதினம் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் வழமை போன்று 03 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். மாறாக ஊரடங்குச்சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டால் எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

இலங்கையிலுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை!!

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் தங்கியுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசேட அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது, இன்று உழைப்பாளர் தினம் என்பதால் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பேரணிகள் அமைதியாக நடத்தப்படுகின்ற போதிலும், பாதுகாப்பு காரணிகளை முன்னிறுத்தி அவ்வாறான பேரணிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கவும் என்று அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Read more