#President

LatestNews

இந்திய ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று வெள்ளிக்கிழமை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, பரிசோதனைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள், வைத்திய கண்காணிப்பில் அவர் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து அவரது மகனிடம் தொடர்பு கொண்டு பேசியதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.    

Read More
LatestNews

வெளிநாடுகளில் சிக்குண்ட 108 இலங்கையர்கள் தாயகம் வருகை

கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 108 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கட்டாரிலிருந்து 83 பேரும், அபுதாபியிலிருந்து 13 பேரும், மாலைத்தீவிலிருந்து 12 பேருமே இன்று வருகை தந்துள்ளனர். இவ்வாறு வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளனர். இதேவேளை உக்ரைனிலிருந்து 160 பேரும், துருக்கியிலிலிருந்து 04 பேரும், இந்தோனேசியாவிலிருந்து 03 பேரும், டுபாயில் இருந்து 22 பேரும் இன்று Read More

Read More
LatestNews

ஜார்ஜியாவின் மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு! வெற்றியை உறுதி செய்த ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடைபெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டினார். குறிப்பாக ஜார்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகவும், அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை. எனினும், ஜார்ஜியா மாநிலத்தில், டிரம்புக்கும், பைடனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் Read More

Read More