சாரதிகளுக்கு வெளிவந்த எச்சரிக்கை! புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேடுதல் பணிகள்!!
போதைப்பொருட்களை பயன்படுத்தி விட்டு வாகனங்களை செலுத்தும் நபர்களை கண்டறிவதற்காக புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அபராதம் செலுத்துவதற்காக இலகுவான வழிமுறையொன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடனட்டை அல்லது வேறு முறையொன்றின் ஊடாக குறித்த அபராதம் செலுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத்தின் படி புள்ளிகளைக் குறைக்கும் முறைமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Read More