இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி
இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக வழங்குவதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். இதற்காக சம்பந்தப்பட்ட குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், சுகாதார சேவையில் உள்ளவர்கள் உட்பட முன்னணி ஊழியர்களுக்கும் ஃபைசர் பூஸ்டர் டோஸாக கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த இலக்கை அடைந்த பிறகு, 60 வயதிற்குட்பட்டவர்களுக்கும் 20 வயதுக்கு மேற்பட்ட பல நோய்களால் அவதிப்படுவோருக்கும் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Read More