#Omicron Infected in Sri lanka

LatestNews

இலங்கையில் 7ஆக அதிகரித்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள்!!

நாட்டில் ஒமைக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. சூடானில் இருந்து வந்த இருவரும், தன்சானியாவில் இருந்து வந்த ஒருவருமாக 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்கனவே, 4 பேர் ஒமைக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read More