#newstamil

FEATUREDLatestNews

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் : வெளியான நற்செய்தி

நாட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைகளைப் பரிசோதித்து நட்டஈடு வழங்கும் செயற்பாடு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை (agricultural and agrarian insurance board) தெரிவித்துள்ளது. அத்துடன் பொலன்னறுவை (Polonnaruwa) மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6,239 விவசாயிகளுக்காக 114 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த சபை மேலும்  குறிப்பிட்டுள்ளது. மேலும், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விவசாய மற்றும் Read More

Read More
FEATUREDLatestNews

மீண்டும் நாடு முழுவதும் மின் வெட்டு

மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்காக,  இலங்கை மின்சார சபை இன்று (10) மற்றும் நாளை (11) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மின்வெட்டுக்கு விடுத்த கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இயக்குநர்  ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார். மின்சாரத் தடையைத் தொடர்ந்து மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள நிலைமையை நிர்வகிக்க, இன்று (10) மற்றும் நாளை (11) ஆகிய நாட்களில் ஒன்றரை மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை முடிவு செய்துள்ளது. அதன்படி, பிற்பகல் 3.30 மணி Read More

Read More
FEATUREDLatestNews

யாழில் இளைஞரை கடத்திய பெண் : வெளிநாட்டு மோகத்தால் நேர்ந்த கதி

யாழில் (Jaffna) இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (09.02.2025) யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாடு செல்வதற்காக ஆசைப்பட்ட இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபாய் வரையான பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வங்கி அறிக்கையை நேரடியாக வந்து தமக்கு காட்டுமாறு வெளிநாட்டு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை Read More

Read More
FEATUREDLatestNews

நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி பாரிய விபத்து

மட்டக்களப்பு (Batticaloa) – கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதியதில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த நோயாளர் காவு வண்டி அதே திசையில் சென்று கொண்டிருந்த  இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் தெய்வாதீனமாக இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளதுடன், நோயாளர் Read More

Read More
FEATUREDLatestNews

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

சுற்றுலா மற்றும் பிற பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த மாதம் முதல் நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை அனுமதி (Cabinet approval) கிடைத்தவுடன் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும் என திறைசேரியின் (Ministry of Finance) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வருட இறுதிக்குள் வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என திறைசேரியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் Read More

Read More
FEATUREDLatestNews

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தகவலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (Public Utilities Commission of Sri Lanka) நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. அதன்படி, மின்சார கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க முன்மொழிந்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது, அனைத்து துறைகளுக்கும் 6 சதவீத மிதமான அளவாக Read More

Read More
FEATUREDLatestNews

நாடாளுமன்ற தேர்தல் திகதியில் ஏற்படவுள்ள மாற்றம்

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் திகதி ஓரிரு நாட்கள் மாற வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10 வது பிரிவின்படி தேர்தலுக்கு நாட்கள் ஒதுக்கியதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன. இந்த நிலையில், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகாமலும் வாக்குப்பதிவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் Read More

Read More
FEATUREDLatestNews

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு யாழ் பல்கலையின் முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கானது எதிர்வரும் ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள கணித மற்றும் உயிரியல் விஞ்ஞான மாணவர்களுக்காகவே குறித்த கருத்தரங்கானது இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள Read More

Read More
FEATUREDLatestNews

ஆறு மாதங்களாக தந்தையிடமிருந்து பதில் இல்லை : வெளிநாட்டிலிருந்து வந்த மகன் கண்ட அதிர்ச்சி காட்சி

ஆறு மாதங்களாக தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காத தந்தைக்கு என்ன நடந்தது என்பதை அறிய இத்தாலியில்(italy) இருந்து வந்த மகன் நம்ப முடியாத சம்பவத்தை கண்டுள்ளார். ஆம் வீட்டினுள் தந்தை உயிரிழந்த நிலையில் எலும்புக்கூடாக கிடப்பதை கண்டு மகன் அதிர்ச்சியடைந்துள்ளார். களுத்துறை(kalutara) நாகொட பகுதியில் தனது 70 வயதான தந்தை தனியாக வசித்து வந்ததாக மகன் தெரிவித்துள்ளார். இந்த வீட்டில் சிலகாலம் முன்பு வசித்து வந்த தாயும் இறந்துவிட்டார். இத்தாலியில் இருந்த அவரது மகன், இலங்கையில் தந்தையிடம் நலம் விசாரித்துவருவதுடன் மனைவி Read More

Read More
FEATUREDLatestNews

சட்டவிரோதமாக டீசல் விற்பனை : ஒருவர் கைது

அனுராதபுரம் (Anuradhapura)- கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபரை 1,225 லீற்றர் டீசலுடன் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுராதபுரம் விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையின் தம்புள்ளை முகாமை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று கலென்பிந்துனுவெவ, மொரகொட மீகஸ்வெவ, நாமல்புர பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது இதன்போது, Read More

Read More