#nallur

LatestNews

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் முற்றுகையிடப்பட்ட விடுதி – சிக்கிய இளைஞர் யுவதிகள்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த முற்றுகை நடவடிக்கையின் போது இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த  முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் Read More

Read More
LatestNews

அதிகரிக்கும் தொற்றாளர்கள்! முடக்கப்படுமா யாழின் ஒரு பகுதி?!!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 103(அரசடி) கிராம அலுவலர் பிரிவில் ஒரு பகுதியினை முடக்குவதற்கு யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் மாகாண சுகாதார பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக 22 பேர் குறித்த பகுதியில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதன் காரணமாக முடக்குவதற்கு யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மாகாண சுகாதார பணிப்பாளர் அரச அதிபர் ,யாழ் பாதுகாப்பு படை தளபதி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More

Read More
LatestNews

யாழ்.மாநகர சபையால் அறிக்கைப்படுத்தப்பட்டுள்ள ஆதனம்!

யாழ். மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் , அதன் ஆதனத்திற்குள் அத்துமீறி நடைபெறும் செயற்பாடுகளை தவிர்க்கும் நோக்குடன் ஆதனம் அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய பின் பகுதியில் பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான ஆதனம் காணப்படுகின்றது. குறித்த ஆதனம் இதுவரை காலமும் அறிக்கையிடப்படாமல் திறந்த வெளியாக காணப்பட்டன. அப்பகுதியில் சில வர்த்தக நிறுவனங்கள் மாநகர சபை அனுமதியுடன் உரிய குத்தகை பணம் செலுத்தி தமது பொருட்களின் வியாபார மற்றும் விளம்பர Read More

Read More