இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்கள்….. ஆரம்பமாகின சேவைகள்!!

இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவுடன் சினோபெக் எனர்ஜி லங்கா(Sinopec) தனது விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனம் கொழும்பு – மத்தேகொட பகுதியில் உள்ள அதன் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(30/08/2023) தனது உத்தியோகபூர்வ எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லீற்றருக்கு தலா 03 ரூபா விலைக் கழிவுடன் தமது விநியோகத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்காக சீனாவின் சினோபெக்(Sinopec), அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம்(United Petrole   Read More

Read more

காவல்துறை காவலில் இருந்த ராஜன் ராஜகுமாரியின் மரணம்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வெலிக்கடையில் காவல்துறை காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜன் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25/08/2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவல இந்த உத்தபிறப்பித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் தீர்ப்பை வழங்கும் போதே மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more

எரிபொருள் கப்பல் வருகை தெடர்பாக மகிழ்ச்சியான செய்தி!!

எரிபொருள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க, பெரும்பாலும் 15 ஆம் அல்லது 16 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கப்பல் வரும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும், எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால் இதன்போது பிரதமருக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

பட்டப்பகலில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணுக்கு திரவத்தை ஊற்றி உயிருடன் தீ வைத்த நபர்!!

கனடாவின் ரொறன்ரோவில் பட்டப்பகலில் பேருந்து ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   மேலும், இது ஒரு தற்செயலான தாக்குதல் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் இது ஒரு கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர். இளம் Read More

Read more

ஊரடங்கு உத்தரவில் தொடர்பான புதிய அப்டேட்!!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13/05/2022) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை மதியம் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 14 ஆம் திகதி  காலை 6 மணிக்கு தளர்த்தப்படும். ஊரடங்கு சட்டம் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  

Read more

வைபவங்களில் trending ஆகியுள்ள “கப்புட்டு காக்கா காக்கா” பாடல்!!

திருமண வைபவங்களில் பாடப்படும் “கப்புட்டு காக்கா.. காக்கா…” காலத்திற்கு காலம் பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவதுண்டு இவ்வாறு பிரபலமாகும் பாடல்கள் பல்வேறு வைபவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது. இவ்வாறான தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமான, போராட்டக் களத்திலும் அடிக்க ஒலிக்கும் பாடல் தற்போது திருமணம் வைபவங்கள் உட்பட மங்கள நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது. “கப்புட்டு காக்கா காக்கா” என்ற பாடல் தற்போது திருமண வைபவங்களில் பாடப்பட்டு வருவதுடன் அவற்றில் கலந்துக்கொள்ளும் இளைஞர், யுவதிகள் Read More

Read more

“நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது……” குமார் சங்ககார!!

ரம்புக்கனையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்து பலர்காயமடைந்த சம்பவத்திற்கு சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் குமார் சங்ககார தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். குமார் சங்ககாரவின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…….. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது. மன்னிக்க முடியாதது. மக்களின் உயிரைப் பாதுகாப்பது காவல்துறையின் முதல் பொறுப்பு. இது வெட்கக்கேடான கொடூர நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

Read more

நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!!

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இந்த அரசு மீண்டும் தவறிழைத்து உள்ளது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முப்படையினருக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டு, ஜனநாயக ரீதியில் போராடுகின்ற மக்களை அடக்க ஒடுக்க இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் அவசரகால சட்டம் கோட்டாபயவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Read More

Read more

இன்றைய மின்தடை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது அல்லது குறைக்கப்படலாம் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பொதுமக்கள் மின்சாரத்தை தொடர்ந்தும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

Read more

அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர் மகனும், ஆசிரியரும் கையும் களவுமாக சிக்கினர்!!

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்று வரும் உயர் தரப் பரீட்சையின்  கணித பாட பரீட்சையின் போது குறித்த பாடசாலை அதிபரின் மகன் பாடசாலை பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்று பிறிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய போது கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில்,   தற்போது கா.பொ.த. உயர் தர பரீட்சை ஆரம்பமாகிய நிலையில் Read More

Read more