உணவு விஷமடைந்தமையால் 325 பேர் வைத்தியசாலையில் அனுமதி….. ஆபத்தான நிலையில் 16 பேர்!!

​கொக்கலை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் உணவு விஷமடைந்தமையால் 325 பேர் காலி – கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(20/04/2022) காலை அனுமதிக்கப்பட்டவர்களில் 16 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா குறிப்பிட்டார். வாந்தி, தலைச்சுற்று, வயிற்றுவலி உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன் குறித்த நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more