42 மில்லியன் ரூபா மதிப்புள்ள 128 கிலோவுக்கும் அதிகமான உடன் 53 பார்சல் கேரள கஞ்சா யாழில் கைப்பற்றப்பட்ட்து!!

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் 42 மில்லியன் ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர். கடற்படையினரால் நேற்று(08/06/2023) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 128 கிலோவுக்கும் அதிகமான(ஈரமான எடை) கேரளா கஞ்சா கடலில் சிக்கியது. விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 04 சாக்கு மூட்டைகளை மீட்டுள்ளதுடன், அதில் இருந்து 53 பார்சல்களில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 128 கிலோ 100 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா இருந்தது. தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகள் காரணமாக கேரள கஞ்சாவை நாட்டிற்கு Read More

Read more

10 மில்லியன் பெறுமதியான “குஷ் கஞ்சா” வெளிநாடுகளில் இருந்து பொதிகளினுடாக நாட்டிற்குள்!!

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களுக்கு என அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளில் பாரியளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்படி, 10 மில்லியன் பெறுமதியான குஷ் கஞ்சா சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு கடமைகளின் போது, குறித்த பொதிகளில் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 13 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Read more

சங்கானை பிரதேசத்தில் இளைஞன் கைது!!

சங்கானை பிரதேசத்தில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை தொட்டிலடி சந்தி பகுதியில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 320 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சித்தங்கேணி மதுவரி நிலைய உத்தியோகத்தர்களால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த நபர் முச்சக்கரவண்டியில் கஞ்சாவினை Read More

Read more

2.2 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் , 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!!

யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு கடத்த முற்பட்ட 2 கிலோ 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஐஸின் (பளிங்கு மெதம்பேட்டமின்) பெறுமதி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் எனவும் கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது என்று Read More

Read more

இலங்கையின் கடனை செலுத்தி முடிக்க கஞ்சா செய்கை – தயாராகும்!!

கஞ்சா செய்கை மற்றும் ஏற்றுமதியின் ஊடாக நாட்டின் கடனை செலுத்தி முடிக்கலாம் என்றும் பில்லியன் கணக்கில் இலங்கைக்கு லாபம் ஏற்படும் எனவும்  அந்த வகையில் நாட்டில் கஞ்சா செய்கையில் ஈடுபடவும் ஏற்றுமதி செய்யவும் தேவையான சட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வௌியிட்டுள்ள அவர், இவ்விடயம் குறித்து இலங்கையில் உள்ள உயர் ஆயுர்வேத வைத்தியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். கஞ்சாவை Read More

Read more

வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியை மடக்கிய படையினர்!!

அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டியில் இன்று பிற்பகல் 1 மணிக்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 3 பொதிகளில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் Read More

Read more