பளை பொலிஸ் பிரிவில் தூக்கில் தொங்கிய இளம் குடும்பஸ்தர்!!
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் நேற்று (20) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இயக்கச்சியில் ஏ9வீதி அருகே உள்ள பராமரிப்பு இல்லாத தனிநபர் ஒருவரின் காணியிலேயே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். கரந்தாய் பளையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான காசிநாதர் கஜிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று 12 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டவரே இன்று மாலை 4.00மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More
Read more