யாழில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தல்!!

யாழ்பாணம் – கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கான பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக J/350 கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதியில் (அண்ணாசிலையடி)  சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் தனிமைபரபடுத்தப்பட்டு குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளது.  

Read more

கிழக்கில் தனிமைப்படுத்தலுக்குள்ளான பிரதேசங்கள்!!

மட்டக்களப்பு-காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவிலுள்ள 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவிலுள்ள 8 கிராம சேவகர் பிரிவுகளை இன்று காலை முதல் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டே 8 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். தனிமைப்படுத்தப்படவுள்ள 8 கிராம சேவகர் பிரிவு எல்லைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை Read More

Read more

தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள்

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பொலிஸ் பிரிவுகளில் இன்று (20) முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவின் பனன்கம்மன கிராம சேவகர் பிரிவில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் பொலிஸ் பிரிவின் குருக்கள்புதுக்குளம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாம்பமுணுவ, கொறக்காபிட்டிய, மாவித்தார வடக்கு, பெலென்வத்தை மேற்கு, பெலென்வத்தை கிழக்கு Read More

Read more