ஏப்ரல் 30 முதல் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்படுகிறது!!

சிறிலங்காவிற்கான வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரக அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த தீர்மானத்தை வெளிநாட்டு அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதற்கமைய, ஒஸ்லோ, பாக்தாத்தில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் மற்றும் சிட்னியில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரக அலுவலகங்களை ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more