சிற்றுண்டிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!!

நேற்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கமைய சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால் Read More

Read more

மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை அவசியம்….. GMOA!!

இலங்கையில் மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையினை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்படாத நிலையில் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். மேலும், “விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை நடைமுறையில் உள்ளபோதும், சில பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படுவதில்லை. அவ்வாறு மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்படாத நிலையில் Read More

Read more

“நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை….” அரசாங்கம் அறிவிப்பு!!

போதிய உணவு கையிருப்பில் இருப்பதால், உணவுப் பற்றாக்குறை தொடர்பில் பீதியடைய வேண்டாம் எனவும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை என பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் அரிசி மற்றும் சீனிக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், நாட்டு மக்களுக்கு தேவையான அரிசி மற்றும் சீனி தற்போது கையிருப்பில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Read more