அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்!!
இன்று முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த எரிபொருள் விநியோகத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசாங்க அதிபர் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை இனம் கண்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக இந்த நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றார்.
Read more