கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதி தப்பியோட்டம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதி ஒருவர் காலி – வந்துரம்ப பகுதியில் தப்பிச் சென்றுள்ளார். குறித்த கைதியை பூசா சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு பஸ்ஸில் அழைத்துச் செல்லும் போது, ஜன்னலினூடாக அவர் தப்பிச்சென்றதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதேவேளை, கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளர் ஒருவரும் தப்பிச் சென்றுள்ளார்.

Read more