முட்டையின் விலையை திருத்தும் புதிய வர்த்தமானி வெளியீடு!!

முட்டை விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,   வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முட்டையின் மொத்த விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

மீண்டும் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிக்கப்படும்….. இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம்!!

நாட்டில் மீண்டும் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை தீவனப் பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், முட்டை ஒன்றின் விலை 47.50 ரூபா என்ற போதிலும், சில இடங்களில் 50 ரூபாவுக்கும் மேலதிகமாகவும் Read More

Read more

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்வு!!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழிஇறைச்சி 850 முதல் 900 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டை, கோழி இறைச்சி விலை உயர்வால் இவற்றை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கும் கோழி மற்றும் முட்டை விற்பனையாளர்கள், கோழி தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் Read More

Read more

“Chicken” பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

கால்நடை தீவனத்தை இறக்குமதி செய்வதற்கு வெட் வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் (D.P. Herath) தெரிவித்துள்ளார். இதற்கமைய, கால்நடை தீவன உற்பத்திக்காக சுமார் 100,000 மெட்ரிக்தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி மூலம் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, ரூ.25/- ஆக இருந்த முட்டையின் விலை ரூ.20/- ஆக வீழ்ச்சியடைவதுடன், கோழி இறைச்சியின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, Read More

Read more

திடீரென அதிகரித்தது முட்டையின் விலை!!

இலங்கையில் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளது. கால்நடைகளுக்கான உணவு  தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு போன்ற காரணத்தால் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களில் 840 ரூபாவாக அதிகரித்திருந்த கோழி இறைச்சியின் விலை தற்போது 650 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தையில் முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more