தொடருந்து சாரதிகள் மற்றும் மேலதிக நேர சேவையில் ஏனைய ஈடுபடும் சாரதிகள் வேலை நிறுத்தத்திற்கு தீர்மானம்!!

தொடருந்து சாரதிகள் அனைவரும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தொடருந்து தொழிற்சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடாங்கொட தெரிவித்தார். மீள்திருத்தம் செய்யப்பட்ட புதிய தொடருந்து கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டிருந்தார். குறித்த கட்டண மாற்றத்திற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி, தொடருந்து கட்டணம் சீராக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாளை முதல் Read More

Read more

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு காத்திருப்பவர்களுக்கு முக்கிய மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையில் தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். குறித்த சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கான காரணமாகும். நாட்டில், சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் வீட்டிற்கே அனுப்பப்படும். Read More

Read more

சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை முடிந்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 06 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான மூலப்பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அட்டைகளுக்கு பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 06 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி முதல் Read More

Read more

விளையாட்டு மைதானங்கள், நடைபாதைகளை பயன்படுத்துங்கள் – உருவாக்கப்படுகிறது புதிய சட்டம்….. அஜித் ரோஹண!!

மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண வெளியிட்டுள்ளார். வாகன சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவே வீதி விபத்துகள் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்தோடு, வீதிகளில் உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடாமல் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதை என்பவற்றை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more