சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு காத்திருப்பவர்களுக்கு முக்கிய மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையில் தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். குறித்த சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கான காரணமாகும். நாட்டில், சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் வீட்டிற்கே அனுப்பப்படும். Read More

Read more

சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை முடிந்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 06 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான மூலப்பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அட்டைகளுக்கு பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 06 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி முதல் Read More

Read more

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க மருத்துவ சான்றிதழ் பெற வந்தவர்களில் கண்டுபிடிக்கப்படட அதிர்ச்சியான உண்மைகள்!!

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப்பிப்பதற்கும் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்த 1213 பேரில் 145 பேர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன(Ajith Rohana)  தெரிவித்தார். தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிக்கைகளினால் இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அஜித் ரோஹன தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானோர் லொறி சாரதிகள் எனவும் Read More

Read more

நிறுத்தப்பட்டது தேர்ச்சி பெற்ற தினத்திலேயே சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது!!

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சாரதி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். அன்றைய தினமே சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் போது மோசடிகள் நடப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் அலுவலகத்தில் இப்படியான மோசடிகள் சம்பந்தமாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கிடைத்த சில முறைப்பாடுகளை அடுத்த இந்த நடவடிக்கையை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலம் Read More

Read more