#Drivers

FEATUREDLatestNewsTOP STORIES

விசேட தேவையுடையோருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம்….. போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் அனுமதி!!

விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். வைத்தியர்களின் இந்த உடன்படிக்கையுடன், அவர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கையொன்று இம்மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

தொடருந்து சாரதிகள் மற்றும் மேலதிக நேர சேவையில் ஏனைய ஈடுபடும் சாரதிகள் வேலை நிறுத்தத்திற்கு தீர்மானம்!!

தொடருந்து சாரதிகள் அனைவரும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தொடருந்து தொழிற்சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடாங்கொட தெரிவித்தார். மீள்திருத்தம் செய்யப்பட்ட புதிய தொடருந்து கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டிருந்தார். குறித்த கட்டண மாற்றத்திற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி, தொடருந்து கட்டணம் சீராக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாளை முதல் Read More

Read More
LatestNewsTOP STORIES

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு காத்திருப்பவர்களுக்கு முக்கிய மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையில் தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். குறித்த சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கான காரணமாகும். நாட்டில், சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் வீட்டிற்கே அனுப்பப்படும். Read More

Read More
LatestNewsTOP STORIES

விளையாட்டு மைதானங்கள், நடைபாதைகளை பயன்படுத்துங்கள் – உருவாக்கப்படுகிறது புதிய சட்டம்….. அஜித் ரோஹண!!

மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண வெளியிட்டுள்ளார். வாகன சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவே வீதி விபத்துகள் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்தோடு, வீதிகளில் உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடாமல் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதை என்பவற்றை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More
LatestNews

வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுமித் அலகக்கோன் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதான காரியாலங்களும், பிரதேச அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான கால இடைவெளியில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் நிறைவடைந்த காலத்தில் இருந்து Read More

Read More
LatestNews

சாரதிகளுக்கு வெளிவந்த எச்சரிக்கை! புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேடுதல் பணிகள்!!

போதைப்பொருட்களை பயன்படுத்தி விட்டு வாகனங்களை செலுத்தும் நபர்களை கண்டறிவதற்காக புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அபராதம் செலுத்துவதற்காக இலகுவான வழிமுறையொன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடனட்டை அல்லது வேறு முறையொன்றின் ஊடாக குறித்த அபராதம் செலுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத்தின் படி புள்ளிகளைக் குறைக்கும் முறைமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Read More