நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் கொள்கலன் ரயிலுடன் பயணிகள் ரயில் மோதல்….. பெருமளவில் வீணாக வழிந்தோடும் டீசல்!!
ரம்புக்கன புகையிரத நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் டீசல் கொள்கலன் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரம்புக்கன புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் கொள்கலன் ரயிலுடன் மற்றுமொரு ரயில் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பெருமளவிலான டீசல் வீணாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. டீசல் கொள்கலன் ரயில் நிறுத்தியிருந்த தண்டவாளத்தில் பயணிகளை ஏற்றி வந்த ரயிலை நிறுத்த முற்பட்ட போதே மோதி Read More
Read more