#Covid-19 infection

LatestNews

பெண் குழந்தையை பிரசவித்து ஒரு வாரத்தில் தாய் Covid-19 தொற்றால் மரணம்…. யாழ். போதனா மருத்துவமனையில் நடந்த துயரம்!!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு பெண் குழந்தை பிரசவித்த நிலையில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார். அவரது பெண் குழந்தை நலமுடன் யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். “கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி கர்ப்பிணிப் பெண் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் மருத்துவக் Read More

Read More
LatestNews

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை சற்று குறைவடைந்துள்ளது…. அரசாங்க அதிபர் க. மகேசன்!!

யாழ் மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை சற்று குறைவடைந்து காணப்படுகின்றது . யாழில் நேற்று 213 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More

Read More
LatestNews

திருகோணமலைலையில் 147 சிறுவர்கள், 148 கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் 147 சிறுவர்களும் 148 கர்ப்பிணித்தாய்மார்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால்  (31) வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட நாளாந்த உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை 4,631 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 99 பேர் மரணித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரைக்கும் 9,815 பேர் தொற்றுக்கு Read More

Read More
LatestNews

பருத்தித்துறையில் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் பலருக்கு தொற்று உறுதி!!

பருத்தித்துறை – மந்திகை ஆதார மருத்துவமனைக்கு நேற்று வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு வருகை தந்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 45 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 32 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியவர்கள், இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படவேண்டியவர்கள் மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என பிரித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Read More