அடுத்து ஒரு முக்கிய உற்பத்தியும் இடைநிறுத்தப்பட்டது நாட்டில்!!

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோஷ நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் திரிபோஷ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே திரிபோஷ நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

Read more