கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்ட இலங்கை மக்கள் வங்கி தொடர்பாக சீன தூதரகம் வெளியிடட அறிவிப்பு!!

இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், தற்போது சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு மக்கள் வங்கியை கருப்பு பட்டியலிலிருந்து விடுவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்றீரியா உள்ளதாக கூறி அதனை நிராகரிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இந்லையிலேயே, நிராகரிக்கப்பட்ட உரத்திற்கான இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என சீனா கோரியிருந்தது. எனினும், அதற்கான பணத்தை செலுத்த மக்கள் வங்கி Read More

Read more

யாழில் வழிப்பறி கொள்ளையர்களிடம் பெருந்தொகை பணத்தை பறிகொடுத்த முதியவர்!!

யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவரிடமிருந்து ஒருதொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் வங்கியில் இருந்து பணத்தினை மீளப்பெற்று சென்ற முதியவரிடமே இனம் தெரியாத வழிப்பறி கொள்ளையர்கள் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து 60ஆயிரம் ரூபாய் பணத்தினை மீளப்பெற்றுக்கொண்டு, வீதிக்கு வந்த போது, துவிச்சக்கர வண்டியில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more