“AK 61” படத்தின் பூஜை இன்று நடைபெற்றது!!
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் AK 61 படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடக்கிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் டைரக்ஷனில் அஜித் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக இரண்டு பாடல்களுக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். கல்லூரி பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Read more