FEATUREDLatestNewsTOP STORIES

நாற்பது நிமிடங்களில் 30000 அம்பு எய்து இலங்கை புதிய உலக சாதனை!!

இலங்கை வில்வித்தையில் 128 வில்வீரர்களின் பங்கேற்புடன் இன்று (17/07/2023) ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்களில் 30000 அம்புகளை எய்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஹோமாகம, தியகம மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

100 வில்லாளர்கள் பங்குபற்றி ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்களில் 17000 அம்புகளை எறிந்து இந்த உலக சாதனையை இந்தியா முன்பு படைத்திருந்தது. இந்த சாதனையையே இலங்கை தற்போது முறியடித்துள்ளது.

இந்த உலக சாதனை நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமால் குணரத்ன கலந்து கொண்டார்.

சாகித்ய வில்வித்தை கிளப் மற்றும் ரேஸ் கோர்ஸ் வில்வித்தை நிறுவனத்தால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியாவின் Wallen Book of World Records வழங்கிய உலக சாதனை சான்றிதழை பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமால் குணரத்ன வழங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *